Thursday, January 31, 2019

என் சீமை .....




பெயரில் "நகரமும்"
முடிவில் "பட்டியையும்"
இனைத்த இரு நூறு குடும்பம் கொண்ட ...
ஏற்றமிகு ஊரே நகரம்பட்டி,
குட்டி கிராமம் தான்
ஆனால் புகழ் சொல்ல ஏராளம் ,.
தெரியாத சரித்திரமும் 
அரியாத சாதனையும் 
அறிந்தே அறியச்செய்யும்
ஆனந்த பூங்காதான் இந்த நகரம்பட்டி ...
என்ன இல்லை இவ்வூரில் .. ?
கோயில்உண்டு, குளம் உண்டு
ஆறும்உண்டு .. நல்ல பேறுமுண்டு
பேச நேரமுண்டு
பேசாத மௌனமுண்டு ..
நாட்டார் குடை உண்டு .,
நாட்டுக்கூட்ட பங்கும் உண்டு ,
தேரில் உரிமையுண்டு ..
போரில் பங்கும் உண்டு ,
குட்டி ஊராயினும் கூத்தாடும் குளங்கள் உண்டு ,
பனைமரம் அதிகமுண்டு ,
பட்டாபிஷேகமுண்டு ,
கூட்ட புளி உண்டு , கோட்டையில் கொடியுமுண்டு!
புரவி பொட்டலுண்டு,
பொங்கச்செய்யுண்டு ,
போர்க்கால வயலுமுண்டு ,
செட்டி ஆறுமுன்டு,
செவிட்டு மடையுமுண்டு
வண்ணாந்துறையும் உண்டு,
வருமானம் நிறைய உண்டு
வேங்கைப்புலி குளமுண்டு ,
வேடிக்கைமனிதருண்டு,
வேதங்கள் நிறைய உண்டு!
அனைக்கட்டும் ஒன்றுஉண்டு,
அருகிலே ஆறும் உண்டு
சவுக்கை இரண்டு உண்டு ,
சௌகரியம் நிறையு உண்டு ,
சரிநிகர் அம்மன்கள் சரித்திர கதையுமுண்டு ,
"கரியான் காளி"யுண்டு ,
"அழகியம்மன் "அருகில் உண்டு ,
ஐயனார் கோவிலுண்டு ..
அருகிலே ஆடும் உண்டு ..
சேங்காய் குளமுண்டு ,
சேகரங்கள் நிறைய உண்டு,
சிவனுக்கு கோவிலுண்டு 
சிவச்சொத்து நிறைய உண்டு ,
புதூரணி குளமும் உண்டு,
புள்ளையார் கோவிலுண்டு!
கட்டுப்பாடு அதிகம்உண்டு .,
தட்டுப்பாடு இருந்ததில்லை ..

பஞ்சாயத்து தலைமைஉண்டு ,
பஞ்சாயங்கள் குறைய உண்டு,
மீன்பிடிகுளங்கள் உண்டு ,
தேன் கூடு அதிகம் உண்டு ,
சின்ன ஊராயினும்
எண்ண முடியவில்லை ,
இடங்கள் தெரியவில்லை ,.
வண்ணவண்ணமாக
வாழ்வில் தோன்றுகின்ற
சிந்தனை சொல்லிடவே !!!
கவிகள் அதிகமுண்டு
காவியங்கள் படைத்ததுண்டு ..
தெரியுமா உங்களுக்கு ? ,.
இருநூறு குடும்பத்தில் ..
வாரிசுகள் பறந்து வாழும்..
பசுமை பூமியன்றோ?
எவ்வூரில் நாங்கள் இல்லை ,?
எதில் எங்கள் பெயர்கள் இல்லை ,?

எங்குமே வாழ்கிறோமே!!!
எக்கச்சக்க புன்னகையில்...
உள்ளூரில் இருந்தாலே..
ஒரு நொடி போதாது பெருமைஎன்று..
அயல் நாட்டில் அடிவைத்து
அதிகமாய் வாழுகிறோம் ..
உள்நாட்டில் . இருந்துவிட்டால் ..
உறவுகள் அறியும் ..
ஆனால் உலகம் அறிந்திடவே
கடல்தாண்டி வாழுகின்றோம் ..
என்றும் அன்புடன்

"நகரம்பட்டி"


Lyrics written by "Ramesh"

Saturday, July 11, 2015

யாசகம்!!

ஆந்த
 காலன் கூட,
யாசகம் கேப்பான்,
ஆந்த
ஈசனிடம்,
 தாயின் பிராசவ வலி காக!!

Tuesday, September 23, 2014

தனிமை......

ஒரு மனிதனின், 
தனிமை!
அவனை தாக்கும், 
புற்றுநோய் வீடா 
கொடுமையானது!!!

Saturday, May 31, 2014

என்கிறது !!

ஒற்றை குடையில்
உன்னை உரசி
நடக்கையில்
மழை நிற்க கூடாது
என்கிறது மனம்..

Wednesday, October 3, 2012

மகாலட்சுமி ..


என்ன சொல்வது இவளை பற்றி,
இவள் பேர்  சூட்டியது போல
 குணத்தாலும்,மனதாலும்
 மகாலட்சுமி நீ,
 நாதனின் ஆதிசக்தியும் நீ,
 பக்தியின் மார்கத்துக்கு ஒரு உதாரணம்  நீ,
இவள் படித்த பாடங்களை விட இவள் தானம் 
செய்த பட்டங்கள் தான்  அதிகம் ,


என் தாயின் பிரிய தோழி நீ,
இனி வரும் தலைமுறைக்கு பக்தியின் மார்க்கத்தை 
காட்ட நீ ஒரு
 உதாரணம் ,
நீ யாசிக்கும் சக்தியை போல உன் பெயரும்
 புகழும் பிரகாசிக்க வேண்டும்,

Monday, September 24, 2012

வைப்ரேஷன்...!!!

ஆடி மாசத்தில் என் வீட்டில் அடி வைத்து சுந்தரத்தின் ராஜ்யத்தை 
அடி மேல்  அடி ஆள பிறந்த மன்மத ராசா இவன் ,
நான் செல்லமா (vibration) வைப்ரேஷன்  என்று கூப்பிடும்
செல்ல தம்பி இவன் ,
நினைவுகள், ஒவ்வொன்றும்  என் கண் முன்னால்
இருக்கிறது என் தந்தை என் அம்மாவிடம் 
கண்ணாமூச்சி  விளையாடியது,
 நீ பிறந்த போது இருக்கும் ,
அன்று வந்த அந்த தந்தியில் இருந்த சுவாரசியம்
 இன்றும்தொடர்கிறது ,
மூல நட்சத்திரத்தில்  பிறந்து மூளையை மூலதனமாக்கி  அஸ்திவாரமாக  இருக்கும் ஆதிசேஷன் நீ ,
சேதுவின் கடலில் 7வது   முத்து  நீ ,
இவன்  நேசிக்கும், தளபதி  போன்று பேச்சுக்களில்
 துள்ளி விளையாடும் கில்லி ,
சிற்பி  கை பட்ட இடம் எல்லாம் எப்படி சிலை ஆகுமோ ,
அது, போல  இவன்  கை பட்ட  கணினி எல்லாம்  எந்திரன்  ஆகும் ,
பாசத்துக்குக்காகவே ஆகிய  நாத்திகவாதி இவன் ,
நீ, உருவாக்கும் ப்ரோக்ராமிங் போல உன் திறமைகள்
 வளர வேண்டும் ,..,
பின்பும்  
உன் (சக்தி ,ஜெஸ்ஸி ) இடம் சொல்லுவேன் இந்த கார்த்திக்கின் லீலைகளை தொடரட்டும்........

பொக்கிஷம் ...

என் சித்தி எனக்கு கொடுத்த அறிய பொக்கிஷம் நீ ,
என்  வீட்டு செல்ல  பிள்ளை  நீ ,
என் முகம் பால் வடியும் முகம் என்று வர்ணிக்கும் தம்பி நீ  ,
"புஜி"  என்று அழைக்கும் செல்ல பிள்ளை நீ ,
சக்தியின்   சாம்ராஜ்யத்தின்   தல  தளபதி  நீ ,
சேது வீட்டின் 6 ஆம் முத்து நீ ,
அந்த கண்ணன்  செய்வதை போல நீ  செய்திருக்கும் லீலைகளுக்கு ஒரு எல்லைகள் இல்லை ,
அவனைவிட மிகவும் பாக்யசாலி நீ,
அவனை கொஞ்ச  இரண்டு அன்னைகள் மட்டும் தான்,
ஆனால் உன்னை  தோளில் சுமக்க இங்கு நான்கு அன்னைகள் ,
7 மாதத்தில்   பிறந்து,
"பிரநீத்" என்று பேர் சூட்டி கொண்டு ,
7 லோகத்தை ஆளும் திறமை கொண்டவன் நீ ,
யாரும் எவரும் தொலை தூரத்தில் இருந்தாலும் தொடர்பு 
 கொள்ளும்   தொ(ல்)லைப் பேசி நீ ,
உன் தாய் நினைத்த கனவுகளை நீ, கட்டும் கட்டிடம் போல உயர  வேண்டும் ,
அந்த மழையில்  பிடித்த பாசம்(பாசி) கூட மறைந்து விடும் ஆனால்
நாங்கள் எல்லாரும்  உன்  மேல்  வைத்த   பாசம்  மட்டும் மாறாது 
அது போல் எங்கள் அனைவரின் நம்பிக்கையையும் நீ 
காப்பாற்றுவாய் என நம்புகிறேன்  என் அன்புத் தம்பி..........