என் வாழ்வின் நட்புக்கு கிடைத்த பரிசு நீ....
என் தாய் தந்தைக்கு தலைமகன் நீ...
என்னுடைய தளபதி நீ...
கேட்டதை கொடுக்கும் கற்பக விருட்சம் நீ...,
தாயைப் போல எங்களை அரவணைத்தாய்..
தந்தைப் போல அறிவுரை கூறுவாய்...
விழும் போது தோள் கொடுக்கும் தோழன் ஆவாய்...
பேசிய வார்த்தைகளை விட செய்த செயல்கள் அதிகம்...
உன்னோடு பகிர்ந்த சுகங்களை விட...
சோகங்கள் தான் அதிகம்.....
அதுதானே என்னவோ சுமைகள் சங்கடங்கள் அல்ல எனக்கு!!!!!!!
என் அன்னை தமிழின் முதல் ரசிகன் நீ...
என்ன பிழை இருந்தாலும் என்னை மன்னித்து விடு..
நண்பா,
என்னை பிரிந்து விடாதே... மறந்தும் இருந்து விடாதே....
கோவில் நகரத்தில் பிறந்த நீயும்,
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊரில்பிறந்த நானும்,
தமிழ் போல் நம் நட்பு வளர இறைவனை வேண்டுகிறன்....
இறைவா!!!!!
மறுபிறவி ஒன்று இருந்தால்... நான்....
மீண்டும் பிறக்க வேண்டும்...
இவன் தோழி தமிழ் டா வாக!!!
என்றும் நட்புடன்,
வள்ளி ( தமிழ் டா )

அட டா... தமிழ் டா...
ReplyDelete