Saturday, April 7, 2012

கைலாசநாதன் !!!


ஓம்!! என்ற சொல்லின் முதல் உச்சரிப்பு நீ,
ருட்ராக்சக்தின் அதிபர் இவன்,
மூன்று மூர்த்திகளில் ஒருவன் இவன்,

நெற்றி கண்ணின் நாயகன் இவன்,
ஆதிபராசக்தியின் மன்னன் இவன்,
லிங்கத்தின் சூஸ்திர ரூபன் இவன்,
எப்போதும் தியானத்தில் இருக்கும்  மஹா யோகி இவன்,
நாட்டிய உலகத்தை ஸ்தாபித்த ராஜன் இவன்,
தவறு!!.... நாட்டியத்தின் ராஜன் (நடராஜன்இவன்,
பாற்கடல் மீது பள்ளி கொண்டிருக்கும் 
ரங்கநாதனின் பிரியா மைத்துனர்  இவன்,
அது தானே என்னவோ மைத்துனர் துணை 
இன்றி ஸ்ரீஹரியின் லீலைகளுக்குமுடிவே இல்லை,
சந்திரனை உன் வெப்பத்தால் அணைத்ததால் 
சந்திரசேகரன் ஆனாய் நீ,
அகில லோகத்தை காக்க நீ விஷ அமுதை  உண்டு 
 நீலகண்டன்  ஆனாய் நீ
லோக நாதாஅருணாச்சலேஸ்வராபரமேஸ்வரா... 
என 
ஆயிரம்  நாமங்கள் உடன்  இருக்கும்
 கைலாசநாதன் நீ
என் பிரிய சபரி நாதனின் 
தந்தையும் நீ,
அந்த ஸ்ரீ ராமனின் துணைவியை காக்க துணை நின்ற
 ராமேஸ்வரனும்  நீ,
லங்காதிபதியின் நேசம் நீ,
தீமை அழித்துதர்மத்தை தலை 
தாங்கும் ஈசன் நீ,
அது தானே என்னவோ வேறு யாருக்கும் இல்லாத
 அளவுக்கு உனக்கு மட்டும்
இத்தனை திவ்யதேசங்கள்  இவ்வுலகில் என் பிராணனே.... எம்பிரானே....

No comments:

Post a Comment