ஒரே ஊரில் பிறந்தோம்...
ஒரே தேதியில் பிறந்தோம்...
வேறு வேறு மாதங்களில் மலர்ந்தோம்.. .
நீ என் அக்காவா அல்லது தங்கையா ?
இல்லை, அதற்க்கும் மேல் தான் பெண்ணே நீ எனக்கு...
ஆம், என் அண்ணனை மணந்ததால் எங்களின்
அண்ணி எனும் உயர்ந்த அந்தஸ்து கொண்டவள் நீ...
எங்கள் வம்சத்தின் குல விளக்கு ம் நீ தான்....
உன்னோடு இருந்த பத்து மாதங்கள், என் தாயின் கருவில்
இருந்த நாட்களுக்கு சமமாக எண்ணுகிறேன்...
அண்ணியே,
என் அக்காவாக தலை சீவி, பூ வைத்து பார்த்தாய்,
அண்ணனாக என் தவறுகளை மன்னித்தாய்,
தம்பியாக என் தோள்களை தாங்கிக் கொண்டாய்....
என் ஆனந்தியே, உன் புன்னகையோடு
என் தோழியாக என் மணநாள் அன்று இருப்பாயா நீ?

Very nice Valli... We born and brought up in Tamilnadu but we are not able to write a poem in Tamil.. But you have done it...Great Valli.. Great!!
ReplyDeletestate or border doesnt matters its our own interest :):)
ReplyDeleteSister...Anni ya..ivvlo vaalthi..ippothaan first time paakuraen...Great...Nee Puhum veedu..Koduthu vaithathu...
ReplyDeleteஅண்ணி,கவிதை சூப்பர்
ReplyDelete