Monday, January 16, 2012

நீனவுகள்......

உன்னை நான்
 நேரில் பார்த்தது விடா ,
உண்  நினைவில் ,
வாழந்ததில்
 தான்,
 அதிகம் அண்பே!!

Saturday, January 14, 2012

பொங்கல்

உழவர் திருநாளாம் -இது
உழைப்பவர் உளமகிழும்
ஒரு நாளாம்..-இது
உத்தம தமிழர் திருநாளாம்
உண்மை திரு நாளாம் -இது
உலகத்தமிழரின் புத்தாண்டாம்!
உதயமாகும் பொழுதெல்லாம் -எம்
இதயம் கனிந்த நன்றிதனை கூறிடுவோம்
இன் சுவை அமுதுண்டு
இன்ப தமிழில் கொண்டாடிடுவோம்
இவ்வுலகில் தமிழனுக்கென்றிருக்கும்
இனிய பெரு நாளாம் -எங்கள்
தமிழர் திருநாளாம் தைத்திருநாள்....

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

அன்புடன்
லட்சியா வள்ளி!!! :):):)

Saturday, January 7, 2012

கோகுலம்!!

வைரங்களுக்கு பட்டை தீட்டி உருவம் கொடுக்கும் 
ஒரு,
வைர வியாபாரி போல..
கல்லுக்கு   உயிர் கொடுக்கும்
 ஒரு ,
சிற்பியை போல...
என் எழுத்துக்கு உயிர் கொடுத்து
அதில் ,
என்ன  பிழைகள்இருந்தாலும்
உன் புன்னகையால் கிண்டலாக சிரித்து
என்தவறுகளை திருத்தும் 
அந்த கரங்களுக்கு
 என்,
 கோடான கோடி நன்றிகள் ...

கோகுல் என்ற பெயர் வைத்து
தித்திக்கும் மாம்பழம் 
உருவாகிற கோகுலத்தில்(சேலம்பிறந்து...
கடல் அலையை போல இந்த மும்பையில் குடியேறி .. 
தன் தாய் தந்தை 
சொல்லை ,
மூல மந்திரமாக கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும்    
பரசு ராமன் இவன்...
ருக்மணிகளை சுற்றி 
திரியாமல்...
தங்கைகளை சுற்றி 
இருக்கும் 
கோகுலத்து கண்ணன்இவன்...
ஜனகனின் சீதையை 
கரம் பிடிக்க காத்து இருக்கும்
ஸ்ரீ ராமன் நீ....


ஐயப்பன்!!!

நான் எழுதிய தமிழ் எழுத்தின் முதல் உச்சரிப்பு நீ ,
அர்த்தனாரிஸ்வரனின் பிரிய மகனும்  நீ
என் தாய்தந்தை எனக்கு குடுத்த உயில் நீ,
என் தாயின் தாலாட்டை கேட்டதை விட...
உன் சரண கோஷங்கள் கேட்டது தான் அதிகம்..
அது தானோ  என்னவோ ஒரு ஊசி போட்டாலும் கூடஅம்மா என்று அழைக்காமல் அய்யனே என் ஐய்யப்பனே
என்று அழைத்ததுதான் அதிகம் .....
உன்னை நேரில் பார்த்தது இல்லை,
ஆனால் உன் முகத்தை.. என்மனதில் உருவகப்படுத்தி  வைத்திருக்கிறேன்..

தாயின் பாசத்தைநட்பின் நேசத்தை..
எனக்கு கற்று கொடுத்த ஆசான் இவன்..
உன் சரணங்கள் உச்சரிக்க சர்வ பாக்கியம் குடுத்த  
எனக்கு இன்னும் ஓர் வரம் வேண்டும் ...
மறு ஜனனம் என்று ஒன்று இருந்தால்... 
அதில் நான்
ஒரு கல்லாக அல்லது உன் பக்தர்கள் ஓய்வெடுக்க உதவும்ஒரு மரமாக பிறக்க வேண்டும் உன் சபரிமலையில்....
வரம் தருவாயா என் ஐய்யப்பனே.........