Saturday, December 17, 2011

ஆறுசுவைய!!


வேறு எதுலும் 
இல்லாத ,
ஆறுசுவையும் 
உன்னே,
 இதழ்ளில் கன்னடன் 
அடி தொழலி....!!!

Saturday, December 3, 2011

கவிதை பரிசு......



என் வாழ்வின் நட்புக்கு கிடைத்த பரிசு நீ....
என் தாய் தந்தைக்கு தலைமகன் நீ... 
என்னுடைய தளபதி நீ...
கேட்டதை கொடுக்கும் கற்பக விருட்சம் நீ...,
தாயைப் போல எங்களை  அரவணைத்தாய்..
தந்தைப்  போல அறிவுரை கூறுவாய்...
விழும் போது தோள் கொடுக்கும் தோழன் ஆவாய்...
பேசிய வார்த்தைகளை விட செய்த செயல்கள் அதிகம்...
 உன்னோடு பகிர்ந்த சுகங்களை விட...
 சோகங்கள் தான் அதிகம்.....
அதுதானே என்னவோ சுமைகள் சங்கடங்கள் அல்ல எனக்கு!!!!!!!
என் அன்னை தமிழின் முதல் ரசிகன் நீ...
என்ன பிழை இருந்தாலும்  என்னை மன்னித்து விடு..
நண்பா,
என்னை பிரிந்து விடாதே... மறந்தும் இருந்து விடாதே....
கோவில் நகரத்தில் பிறந்த நீயும்,
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊரில்பிறந்த நானும்,
தமிழ் போல் நம் நட்பு வளர இறைவனை வேண்டுகிறன்....
இறைவா!!!!!
மறுபிறவி ஒன்று இருந்தால்... நான்....
மீண்டும் பிறக்க வேண்டும்...
இவன் தோழி தமிழ் டா வாக!!!

என்றும் நட்புடன்,
வள்ளி ( தமிழ் டா )


Thursday, November 24, 2011

மரணம்...

யாராலும் தவிர்க்க முடியாதது....
எவராலும் மறக்க முடியாதது....         
ஈசனின் சர்வ நிச்சயிக்கப்பட்ட..
ஒரே தீர்ப்பு....

மரணம்...

திசை !!!!!!!!!


திசை என்று தெரியாமல்
 தவிக்கும் என் ,
செவிகளுக்கு...
உன் சலங்கை,
 ஓசைகள் தானே...
என்னை ,
தாலாட்டும் இன்னிசை.... தோழி!!!!!

Tuesday, November 22, 2011

காத்திருந்தேனே...


மார்கழி திங்கள் தோறும்,
நோம்பு இருந்து உனக்காக
காத்திருந்தேன்...  
நீ, எப்பொழுது
வருவாய் 
என,
புறாவை அல்ல  

 நிலாவை,
தூது விட்டேன் கண்ணா!!!!!!!!!

Friday, November 18, 2011

பிழை !!....


என்ன பிழை 
அவன் என்னிடம் கண்டான் 
என்று,தெரியவில்லை  தோழி..........!!!
ஆனால் ,இன்று
 அவன் என் பெயரை கூட ,
சொல்ல மறந்துவிட்டான்....!!!

Wednesday, November 16, 2011

சிற்பி !!

என்னை செதுக்க...,
 தன்னைத்தானே ,
மேளிகிய ........
ஒரு சிற்பி 
என்
தந்தை !!!








இளமை!!!

வறுமையும்,தனிமையும், இளமையின்
 புற்று நோய் !!!



நித்திரை!!!

நித்திரை இல்லாமல்  தவிக்கும்!!
 என்  ,
கண்களுக்கு ,
உன்  "வருகை" தானே,
" சித்திரை" -கண்ணா!!!!!!!!!

கல்லூரி...

என் கல்லறையை 
 விட ,
கொடூரமானது,
 அந்த அனுபவம்...
எனக்காக 
என் 
கல்லறையில்,
விடும்,
கண்ணீரை விட..
என் தாய், தந்தை ,
என் ,
கல்லூரி வனவாசத்துக்கு கொடுத்த
 கண்ணீர் அதிகம்,
பட்டு. பட்டு..
 கண்ணீரை,
 விற்று ,
வாங்கிய பட்டம் 
அது,
 மூச்சு நின்று போனாலும் 
பட்டு  போகாது...
மறந்து போகாது.. 
அந்த ரெண்டு எழுத்து B.E.  

Thursday, October 20, 2011

பட்டு புடவை....

 

ஒரு பெண்ணின் அழகுக்கு  
அழகு செறிக்கும்
பட்டு  புடவை....

அந்த புடவைக்கு வண்ணம் 
கொடுக்கும் அந்த
 நெசவாளனின்...வாழ்வில் ஏன் அந்த
 பட்டாம்பூச்சி...
 பட்டு பொய் இருக்கிறது!!! 


Saturday, October 15, 2011

தோழா !!!

தோழா இன்று உன் தோல்மீது 
சாயும் போது தான் தெரிகிறது ,
சுமைகள் சங்கடங்கள் அல்ல ,
அவை ,
சுகங்கள்  தான்!!!

Monday, October 10, 2011

நிழலும் நிஜமும்

நிழல்கள் அழிந்தாலும் நட்பின்
 நிஜங்கள்
 அழிவதில்லை ...!!!

Thursday, October 6, 2011

விஜயதசமி:):)!!!


ஒரு விஜயதசமி அன்று தான்
எந்தையும் தாயும் என் கரம் பிடித்து
கலைவாணி முன் 'அ' எழுத
சொல்லி கொடுத்தார்கள்
இத்தனை ஆண்டுகளுக்குப் பின்
இன்று அதே விஜயதசமியன்று
கவிதை எழுத ஆரம்பித்திருக்கிறேன் :):)

தனிமை!!

அன்று என் நிறத்தால் தனிமை ஆனேன்
பின் என் கல்வியால் தனிமை ஆனேன்
இன்றோ இலவு காத்த கிளியானேன் 

நான் தான்

சிறந்த பரிசு......



உன் இதழோடு என்ன  இதழ்  சேர  வேண்டும் ,
உன்  மார்பில்  என்  தலை  சாய
வேண்டும் ,இது  காதல்  இல்லை ,

காமம் கூட   இல்லை ,
நம்  உறவுக்கு  என்  உயிர்  தரும்  பரிசு ....
உனக்காக உயிர் கொடுத்துவிடலாம்  ஆனால்,
  உன்  உயிரோடு  உயிராக  இருப்பது  சிறப்பு .

அண்ணி....


ஒரே ஊரில் பிறந்தோம்...
ஒரே தேதியில் பிறந்தோம்...
வேறு வேறு   மாதங்களில் மலர்ந்தோம்...
நீ என் அக்காவா அல்லது தங்கையா ?
இல்லைஅதற்க்கும் மேல் தான் பெண்ணே நீ எனக்கு...
ஆம்என் அண்ணனை மணந்ததால் எங்களின்
அண்ணி எனும் உயர்ந்த அந்தஸ்து கொண்டவள் நீ...
எங்கள் வம்சத்தின் குல விளக்கும் நீ தான்....
உன்னோடு இருந்த பத்து மாதங்கள்என் தாயின் கருவில்
இருந்த நாட்களுக்கு சமமாக எண்ணுகிறேன்...
அண்ணியே,
என் அக்காவாக தலை சீவிபூ வைத்து பார்த்தாய்,
அண்ணனாக என் தவறுகளை மன்னித்தாய்,
தம்பியாக என் தோள்களை  தாங்கிக் கொண்டாய்....
என் ஆனந்தியேஉன் புன்னகையோடு  
என் தோழியாக என் மணநாள் அன்று இருப்பாயா நீ?

முதல் நமஸ்காரம் !!

A First Namaskarm:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
குறள் விளக்கம்-
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன;
(அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
Kural English Version
With alpha begins all alphabets;
And the world with the first Bagavan.

Explanation: As the letter A is the first of all letters,
so the eternal God is first in the world.