"ஸ்ரீ" என்ற சொல்லுக்கு உயிர்கொடுத்த ஸ்ரீ ராமன் நீ,
துளசி தாசனின் நாயகன் நீ,
அஞ்சணை புத்திரனின் நாடி நீ,
தசரதனின் புத்திரகாமேஷ யாகத்தின் பரிசு நீ,
ரகு குல நாதனின் வம்சம் நீ,
ஜனகரின் புதல்வியை கரம் பிடித்த மன்னன் நீ,
சேதுசமுத்திரத்தின் அஸ்திவாரம் நீ,
சேதுசமுத்திரத்தின் அஸ்திவாரம் நீ,
சிவனின் அம்பை உடைத்த மாவீரன் நீ,
தன் தந்தையின் நரைத்த
முடியால் கூனியின் சூழ்ச்சிக்கு பலி ஆனவன் நீ,
தந்தையின் வாக்கை, சகோதர பாசத்தை, பத்தினியின்விரதத்தை, பக்தியின் நேசத்தை......
மூவுலகத்துக்கும் ஸ்தாபித்த உன் புகழுக்கு எல்லையேஇல்லை...
தினமும் எழுதுகிறேன் உன் நாமத்தை....
அப்போதாவது...
ப்ராப்திக்க வேண்டும் ....
அந்த அணிலுக்கு நீ,
கொடுத்த
பாக்கியத்தை மண்ணுலகில் வாழும் எல்லோருக்கும்......


