Wednesday, March 21, 2012

ஓவியம்

என் தாய் சித்தரித்த ஓவியம் நீ...
உத்தராயண தினம் 

அன்று ,
திருவாதிரை நக்க்ஷதிரத்தில் பிறந்த
 ஸ்ரீராமன் நீ...!!
சந்திரனின் ராஜ்யத்தை 

தலை,
 தாங்கும் தளபதி நீ..!!!
நான் நெஞ்சில்,

 சுமந்த,
 மூத்த பிள்ளை நீ...!!
பொறுமையின்,
சிகரம் நீ...!!
நீ, பேசிய வார்த்தைகளை விட,

 உன் கண்கள் பேசியது தான் அதிகம்...
நீ வாங்கும் (BE) பட்டம் தான்,

 இந்த 
வனவாசத்தில் உனக்கு 
கிடைக்க போகும் பட்டாபிசேகம்....
தவமாய் இருந்து,

வரம் கேட்டு கத்து இருக்கிறேன் 
அந்த
 பட்டாபிசேகத்தை இந்த
 கண்களால் காண....!!!
கண்களில் அன்று வரும், 

கண்ணீர் தான்
 தித்திக்கும் என்றென்றும்..!!
ஏழேழு, ஜென்மத்துக்கும்

 நம் ,
உறவு இருக்க வேண்டும்...
அது தான்,
 என்னவோ... 
உன்னை காண 
எனக்கு ஏழு வருடங்கள் ஆகி விட்டது...
ஏழு வருடங்கள் ஆனாலும்,

 எழுபது வருடங்கள் ஆனாலும்,
 என்றென்றும் எனக்கு "BABIE" நீ.......
- Show quoted text -

Monday, January 16, 2012

நீனவுகள்......

உன்னை நான்
 நேரில் பார்த்தது விடா ,
உண்  நினைவில் ,
வாழந்ததில்
 தான்,
 அதிகம் அண்பே!!

Saturday, January 14, 2012

பொங்கல்

உழவர் திருநாளாம் -இது
உழைப்பவர் உளமகிழும்
ஒரு நாளாம்..-இது
உத்தம தமிழர் திருநாளாம்
உண்மை திரு நாளாம் -இது
உலகத்தமிழரின் புத்தாண்டாம்!
உதயமாகும் பொழுதெல்லாம் -எம்
இதயம் கனிந்த நன்றிதனை கூறிடுவோம்
இன் சுவை அமுதுண்டு
இன்ப தமிழில் கொண்டாடிடுவோம்
இவ்வுலகில் தமிழனுக்கென்றிருக்கும்
இனிய பெரு நாளாம் -எங்கள்
தமிழர் திருநாளாம் தைத்திருநாள்....

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

அன்புடன்
லட்சியா வள்ளி!!! :):):)

Saturday, January 7, 2012

கோகுலம்!!

வைரங்களுக்கு பட்டை தீட்டி உருவம் கொடுக்கும் 
ஒரு,
வைர வியாபாரி போல..
கல்லுக்கு   உயிர் கொடுக்கும்
 ஒரு ,
சிற்பியை போல...
என் எழுத்துக்கு உயிர் கொடுத்து
அதில் ,
என்ன  பிழைகள்இருந்தாலும்
உன் புன்னகையால் கிண்டலாக சிரித்து
என்தவறுகளை திருத்தும் 
அந்த கரங்களுக்கு
 என்,
 கோடான கோடி நன்றிகள் ...

கோகுல் என்ற பெயர் வைத்து
தித்திக்கும் மாம்பழம் 
உருவாகிற கோகுலத்தில்(சேலம்பிறந்து...
கடல் அலையை போல இந்த மும்பையில் குடியேறி .. 
தன் தாய் தந்தை 
சொல்லை ,
மூல மந்திரமாக கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும்    
பரசு ராமன் இவன்...
ருக்மணிகளை சுற்றி 
திரியாமல்...
தங்கைகளை சுற்றி 
இருக்கும் 
கோகுலத்து கண்ணன்இவன்...
ஜனகனின் சீதையை 
கரம் பிடிக்க காத்து இருக்கும்
ஸ்ரீ ராமன் நீ....


ஐயப்பன்!!!

நான் எழுதிய தமிழ் எழுத்தின் முதல் உச்சரிப்பு நீ ,
அர்த்தனாரிஸ்வரனின் பிரிய மகனும்  நீ
என் தாய்தந்தை எனக்கு குடுத்த உயில் நீ,
என் தாயின் தாலாட்டை கேட்டதை விட...
உன் சரண கோஷங்கள் கேட்டது தான் அதிகம்..
அது தானோ  என்னவோ ஒரு ஊசி போட்டாலும் கூடஅம்மா என்று அழைக்காமல் அய்யனே என் ஐய்யப்பனே
என்று அழைத்ததுதான் அதிகம் .....
உன்னை நேரில் பார்த்தது இல்லை,
ஆனால் உன் முகத்தை.. என்மனதில் உருவகப்படுத்தி  வைத்திருக்கிறேன்..

தாயின் பாசத்தைநட்பின் நேசத்தை..
எனக்கு கற்று கொடுத்த ஆசான் இவன்..
உன் சரணங்கள் உச்சரிக்க சர்வ பாக்கியம் குடுத்த  
எனக்கு இன்னும் ஓர் வரம் வேண்டும் ...
மறு ஜனனம் என்று ஒன்று இருந்தால்... 
அதில் நான்
ஒரு கல்லாக அல்லது உன் பக்தர்கள் ஓய்வெடுக்க உதவும்ஒரு மரமாக பிறக்க வேண்டும் உன் சபரிமலையில்....
வரம் தருவாயா என் ஐய்யப்பனே......... 

Saturday, December 17, 2011

ஆறுசுவைய!!


வேறு எதுலும் 
இல்லாத ,
ஆறுசுவையும் 
உன்னே,
 இதழ்ளில் கன்னடன் 
அடி தொழலி....!!!

Saturday, December 3, 2011

கவிதை பரிசு......



என் வாழ்வின் நட்புக்கு கிடைத்த பரிசு நீ....
என் தாய் தந்தைக்கு தலைமகன் நீ... 
என்னுடைய தளபதி நீ...
கேட்டதை கொடுக்கும் கற்பக விருட்சம் நீ...,
தாயைப் போல எங்களை  அரவணைத்தாய்..
தந்தைப்  போல அறிவுரை கூறுவாய்...
விழும் போது தோள் கொடுக்கும் தோழன் ஆவாய்...
பேசிய வார்த்தைகளை விட செய்த செயல்கள் அதிகம்...
 உன்னோடு பகிர்ந்த சுகங்களை விட...
 சோகங்கள் தான் அதிகம்.....
அதுதானே என்னவோ சுமைகள் சங்கடங்கள் அல்ல எனக்கு!!!!!!!
என் அன்னை தமிழின் முதல் ரசிகன் நீ...
என்ன பிழை இருந்தாலும்  என்னை மன்னித்து விடு..
நண்பா,
என்னை பிரிந்து விடாதே... மறந்தும் இருந்து விடாதே....
கோவில் நகரத்தில் பிறந்த நீயும்,
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊரில்பிறந்த நானும்,
தமிழ் போல் நம் நட்பு வளர இறைவனை வேண்டுகிறன்....
இறைவா!!!!!
மறுபிறவி ஒன்று இருந்தால்... நான்....
மீண்டும் பிறக்க வேண்டும்...
இவன் தோழி தமிழ் டா வாக!!!

என்றும் நட்புடன்,
வள்ளி ( தமிழ் டா )