Saturday, May 12, 2012

அன்னை !!!

என் தந்தையின்  முதுகெலும்பு நீ ,
சேது வீட்டின் குலவிளக்கு நீ ,
என்  வீட்டின் சௌபாக்யலட்சுமி  நீ ,
எனக்குள் இருக்கும் வீரலட்சுமி நீ ,
விடாமுயற்சி ஒன்றை மட்டும் மூலமந்திரமாக கொண்டு 
வாழும் தைரியலட்சுமி நீ ,
எனக்கு வைரமும், மாணிக்கங்களும்  (தம்பியும் ,தங்கையும் )
பரிசாக தந்த கருணாலட்சுமி  நீ ,
தன் ஏழ்மையான புன்னகையால் எல்லோரின் மனதையும்  
பரவசம் ஆக்கும்  ஸ்ரீலட்சுமி தேவி நீ ,
என்  குடும்பத்தின் ஒவ்வொரும் விஜயத்துக்கு 
பின்னால்  இருக்கும் ஒரு விஜயலட்சுமி நீ,
தீபாவளி அன்று பிறந்த என்  
வீ ட்டு அஷ்டலட்சுமி நீ ,
மற்றவர்களுக்கு உதவிகரங்களை நீட்டும் ஒரு 
அக்ஷயபாத்திரம் நீ ,
எனக்கு தமிழ் மொழியை கற்றுகொடுத்த ஆசான் நீ ,
கிராமத்தில் பிறந்தாலும் கருத்துக்களில்
 ஒரு
முற்போக்கு சிந்தனைவாதி நீ ,
உழைப்பின் சிகரம் நீ ,
நான் ஆசையாய் கிண்டல்  செய்யும் தோட்டா சிணுங்கி நீ ,
பெற்றேன் பாக்கியத்தை நீ ,
கருவறையில் என்னை சுமந்ததால் !
பெற்றேன் பாகத்தை 
அந்த ,ஸ்ரீ ஹரியைவிட  நான் ,
அதிர்ஷடசாலி,
ஏன்
 என்றால் அவன் சாய
பாம்பு மட்டும் தான்  இருக்கிறது!
ஆனால்,
 நான் சாய்த்துக்கொள்ள உன் மடி இருக்கிறது!

Sunday, May 6, 2012

அலைகள்!!!

!
பாஞ்சாலியின் கண்ணீரால்

பாரதயுத்தம்,
கண்ணகியின் சபதத்தால்
மதுரையின் அழிவு ,
சீதையின் தனிமையால்
இலங்கையின் அழிவு ,


என்று எந்த பெண்ணின் கண்ணீரின்
சாபமோ தெரியவில்லை இந்த
கடலின் அலைகள் பொங்கி 
எழுகிறது (சுனாமி )

Thursday, May 3, 2012

வள்ளல்!!

வள்ளி  பெற்ற வள்ளல்  நீ ,
சேதுவின் ,அகராதியில்  நான்காவது  பாகம்  நீ ,
உழைப்பை மட்டும்  கடவுளாக நம்பி  இருக்கும் 
 ஒரு
 நாத்திகாவதி நீ ,
என்னை  திட்டும், நானும் 
கோபித்துக் கொள்ளும்  முதியவர் !! - தவறு,என்றும் 
 இளமையாக
இருக்கும் என்  தோழன்  நீ,
நீ  பேசிய  பேச்சில் குயில் 
 ஓசை 
 கேட்டது  இல்லை,
ஆனால், உன்  அன்புக்கு மயங்கிய 
மனிதர்களை பார்த்திருக்கிறேன்..
நீ ,கட்டிய  ஏரிகளை விட -
பெரியது  உன்  சிந்தனைகளும் ..செயல்களும் ,
சிதம்பரத்தில்  பட்டம்  பெற்ற  நீயும்..
மதுரையில்  பட்டம்  பெற்றவர்களை 
ஆட்சி  செய்யும்  மன்னாதிமன்னன்  நீ!
பாக்கியம்  பெற்றேன் 
 நான் ,
அன்று  அந்த  வள்ளி,
உன்னிடம்  உரையாடிய  நேரத்தை  விட 
இன்று  இந்த  வள்ளி உரையாடிய 
நேரம்  தான்  அதிகம் ,
மகளாய்
கோரிக்கை  ஒன்று  வைக்கிறேன் !!
கேள் ,
என் மன்னா,
அந்த  குந்தியின்  புத்திரன்  போல ,
நீ , செய்யும்  தர்மத்தை  கூட ,
 தர்மம்  செய்து  விடாதே
ஏன் என்றால்  இந்த 
 கலியுகத்தில்  உன்  போன்ற 
கர்ணன்களை  விட  கம்சர்கள்  தான்  அதிகம்!







Tuesday, April 24, 2012

தந்தை !!


எங்களை சுமக்காமல்  சுமக்கும் தாய் நீ ,
சேது சமுத்திரம் ...பிழை !!சேது சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்த ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி நீ,
பயத்தில் குழந்தையயும் ,
மனதில் சிரிப்பையும்  வைத்து ,
வாழ்க்கையை நோக்கி செல்லும் ஒருஎதார்த்தவாதி நீ ,
பரணி நட்சத்திரத்தில்  பிறந்துஎன்றும் தரணியை ஆளும்சந்திரன் நீ,
முன்று!! பொறியாளர்களை உருவாக்கிய,
தவறு !!!செதுக்கிய ,
பிரம்மா நீ,
நீ பார்க்காத உலகத்தையும் நீ
ஏணி போல்நின்றுபார்க்க செய்தாய் ,
பிப்ரவரி 18 இல்  பிறந்ததினலோ
என்னவோ ,
என் அய்யனின் 18படிகள்
போலஉன்
பக்தர்கள் (எங்களின்) சங்கடங்கள் கூட 
சுமைகள் அல்ல உனக்கு ,
சபரிநாதனை எங்களுக்கு காட்டிய  குருசுவாமி நீ ,
நீ எங்களுக்கு கொடுத்த அழியாத புதையல் கல்வி ,
இன்று தவம் இருந்துவேண்டுகிறேன்
அந்தசபரிநாதனிடம்!!!
அந்த வரம் வேண்டும் என்று என்றென்றும்
இருக்க வேண்டும் இந்த நேருவின் இந்திராவாக!சபரிநாதன் ,
எனக்கு ,கொடுக்க வேண்டும் அந்த சந்தோசத்தை  
அன்று
அந்த அணிலுக்கு ஸ்ரீ ராமமூர்த்திக்கு!! செய்த  சேவையில்
கிடைத்த
சந்தோஷத்தை!!


Saturday, April 7, 2012

கைலாசநாதன் !!!


ஓம்!! என்ற சொல்லின் முதல் உச்சரிப்பு நீ,
ருட்ராக்சக்தின் அதிபர் இவன்,
மூன்று மூர்த்திகளில் ஒருவன் இவன்,

நெற்றி கண்ணின் நாயகன் இவன்,
ஆதிபராசக்தியின் மன்னன் இவன்,
லிங்கத்தின் சூஸ்திர ரூபன் இவன்,
எப்போதும் தியானத்தில் இருக்கும்  மஹா யோகி இவன்,
நாட்டிய உலகத்தை ஸ்தாபித்த ராஜன் இவன்,
தவறு!!.... நாட்டியத்தின் ராஜன் (நடராஜன்இவன்,
பாற்கடல் மீது பள்ளி கொண்டிருக்கும் 
ரங்கநாதனின் பிரியா மைத்துனர்  இவன்,
அது தானே என்னவோ மைத்துனர் துணை 
இன்றி ஸ்ரீஹரியின் லீலைகளுக்குமுடிவே இல்லை,
சந்திரனை உன் வெப்பத்தால் அணைத்ததால் 
சந்திரசேகரன் ஆனாய் நீ,
அகில லோகத்தை காக்க நீ விஷ அமுதை  உண்டு 
 நீலகண்டன்  ஆனாய் நீ
லோக நாதாஅருணாச்சலேஸ்வராபரமேஸ்வரா... 
என 
ஆயிரம்  நாமங்கள் உடன்  இருக்கும்
 கைலாசநாதன் நீ
என் பிரிய சபரி நாதனின் 
தந்தையும் நீ,
அந்த ஸ்ரீ ராமனின் துணைவியை காக்க துணை நின்ற
 ராமேஸ்வரனும்  நீ,
லங்காதிபதியின் நேசம் நீ,
தீமை அழித்துதர்மத்தை தலை 
தாங்கும் ஈசன் நீ,
அது தானே என்னவோ வேறு யாருக்கும் இல்லாத
 அளவுக்கு உனக்கு மட்டும்
இத்தனை திவ்யதேசங்கள்  இவ்வுலகில் என் பிராணனே.... எம்பிரானே....

Friday, April 6, 2012

வித்தியாசம் ?

உறவுக்கும் உரிமைக்கும் 
என்ன வித்தியாசம்?
உரிமை உறவுகள்  இருக்கும் 
இடம் தானே  வரும்
ஆனால் அன்று
 உன் மௌனத்தின் பரிசு உறவுக்காகவா?
 இல்லை உரிமைக்காகவா?




Friday, March 30, 2012

"ஸ்ரீ ராமன்"


"ஸ்ரீஎன்ற சொல்லுக்கு உயிர்கொடுத்த ஸ்ரீ ராமன் நீ,
துளசி தாசனின்  நாயகன் நீ,
அஞ்சணை புத்திரனின் நாடி நீ,
தசரதனின்  புத்திரகாமேஷ யாகத்தின் பரிசு நீ,
ரகு குல  நாதனின் வம்சம் நீ,
ஜனகரின் புதல்வியை கரம் பிடித்த மன்னன் நீ,
சேதுசமுத்திரத்தின்  அஸ்திவாரம் நீ,
சிவனின்  அம்பை உடைத்த மாவீரன் நீ
தன் தந்தையின் நரைத்த 
முடியால் கூனியின் சூழ்ச்சிக்கு பலி ஆனவன் நீ,
தந்தையின் வாக்கைசகோதர பாசத்தைபத்தினியின்விரதத்தைபக்தியின் நேசத்தை......
மூவுலகத்துக்கும் ஸ்தாபித்த உன் புகழுக்கு எல்லையேஇல்லை...
தினமும் எழுதுகிறேன் உன் நாமத்தை....
அப்போதாவது...
ப்ராப்திக்க வேண்டும் ....
அந்த அணிலுக்கு நீ,
கொடுத்த
பாக்கியத்தை மண்ணுலகில் வாழும் எல்லோருக்கும்......