Thursday, May 3, 2012

வள்ளல்!!

வள்ளி  பெற்ற வள்ளல்  நீ ,
சேதுவின் ,அகராதியில்  நான்காவது  பாகம்  நீ ,
உழைப்பை மட்டும்  கடவுளாக நம்பி  இருக்கும் 
 ஒரு
 நாத்திகாவதி நீ ,
என்னை  திட்டும், நானும் 
கோபித்துக் கொள்ளும்  முதியவர் !! - தவறு,என்றும் 
 இளமையாக
இருக்கும் என்  தோழன்  நீ,
நீ  பேசிய  பேச்சில் குயில் 
 ஓசை 
 கேட்டது  இல்லை,
ஆனால், உன்  அன்புக்கு மயங்கிய 
மனிதர்களை பார்த்திருக்கிறேன்..
நீ ,கட்டிய  ஏரிகளை விட -
பெரியது  உன்  சிந்தனைகளும் ..செயல்களும் ,
சிதம்பரத்தில்  பட்டம்  பெற்ற  நீயும்..
மதுரையில்  பட்டம்  பெற்றவர்களை 
ஆட்சி  செய்யும்  மன்னாதிமன்னன்  நீ!
பாக்கியம்  பெற்றேன் 
 நான் ,
அன்று  அந்த  வள்ளி,
உன்னிடம்  உரையாடிய  நேரத்தை  விட 
இன்று  இந்த  வள்ளி உரையாடிய 
நேரம்  தான்  அதிகம் ,
மகளாய்
கோரிக்கை  ஒன்று  வைக்கிறேன் !!
கேள் ,
என் மன்னா,
அந்த  குந்தியின்  புத்திரன்  போல ,
நீ , செய்யும்  தர்மத்தை  கூட ,
 தர்மம்  செய்து  விடாதே
ஏன் என்றால்  இந்த 
 கலியுகத்தில்  உன்  போன்ற 
கர்ணன்களை  விட  கம்சர்கள்  தான்  அதிகம்!







No comments:

Post a Comment