Tuesday, May 29, 2012

நவ மணிகள்!!

சேது சாம்ராஜ்ஜியத்தில் நான்காம் அத்தியாயம் நீ!
அந்த நடராசனின் சலங்கையின்,
நவ மணிகள் பிரிந்ததில் பிறந்து நவசக்தி ஆனவன் நீ!
என் வீட்டின் சத்ருகன் (ராமனின் சகோதரன் ) நீ ,
தன்னுடைய பதினாறு வயதில் இருந்து தன் சுமையை
தானே தாங்கும்  சுமை தாங்கி நீ !
நீ  கட்டும்  கட்டிடம்  போன்றது  உன்  மன  வலிமையையும் ,
 நீ  எடுக்கும்  முடிவுகளும் !
பலாவின் வெளித்தோற்றம் போன்றது உன் தோற்றம்... 
கரடுமுரடானது !
ஆனால் பலாச்சுளை போன்று தித்திப்பு  உன் மனது! ..
மனிதனின் முகத்தைப் பார்த்து மனதைக் 
கணிக்கும் எந்திரம் நீ !
நீ  காணும்  பார்வை  அந்த  தொலைநோக்கியின்  பார்வையை விட
கூர்மையானது...தெளிவானது!    
நன்றி சொல்கிறேன் உனக்கு ..
ஏனென்றால்  சித்தியை தங்கையாக எனக்கு பரிசாக தந்ததற்கு !

No comments:

Post a Comment