என் வீட்டின் ஆலமரம் நீ ,
அந்த கதிரவன் எழும் முன் உதிக்கும் சூரியன் நீ.!
உழைப்பின் சமஸ்தானம் நீ,,
ராமேஸ்வரத்துக்கு சென்ற என் பாட்டிக்கு ஏற்ற அரிய பொக்கிஷம் நீ !
உன்னிடம் நான் கற்றுக் கொண்டது
மனதோடு உழைத்தால் அந்த இமாலயத்தின் உச்சியை கூட தொட்டு விடலாம் !
அந்த கதிரவன் எழும் முன் உதிக்கும் சூரியன் நீ.!
உழைப்பின் சமஸ்தானம் நீ,,
ராமேஸ்வரத்துக்கு சென்ற என் பாட்டிக்கு ஏற்ற அரிய பொக்கிஷம் நீ !
உன்னிடம் நான் கற்றுக் கொண்டது
மனதோடு உழைத்தால் அந்த இமாலயத்தின் உச்சியை கூட தொட்டு விடலாம் !
நீ எங்களுக்கு கொடுத்த உயில் கல்வி !
கந்தனின் நாமத்தை அந்த அவ்வை உச்சரித்ததை விட ,
நீ உச்சரித்தது தான்
அதிகம்!
அது தானோ என்னவோ
உனக்கு,
கந்தன் கொடுத்த தவப் பரிசு உன் வள்ளியம்மை !
துணை வந்தவள் துணை நில்லாமல்
போனாலும்,
துணை இருப்பாள் உன் வீட்டு இரண்டு தூண்களாக!
என் வீட்டுத் தோட்டத்துப் பின்
இருக்கும்
பழங்களின் சுவை கூட உன் உழைப்பின் பலன்கள் தான் !!
அந்த ராமன் கட்டிய பாலத்தை (சேதுசமுத்திரம் )விட,இந்த சேது என் கிராமத்துக்கு கட்டிய கட்டிடங்கள் தான் அதிகம் ,
நான் மிகவும் அதிர்ஷ்டசாலி ,
ஏன் என்றால்,
நான் மிகவும் அதிர்ஷ்டசாலி ,
ஏன் என்றால்,
அன்று அந்த வள்ளிக்கு கிடைத்த
திட்டை விட இன்று இந்த வள்ளிக்கு கிடைத்த திட்டு மிகக் குறைவு !
நீ அப்பாவுக்கு கொடுக்காத கைக்காசை கூட எங்களுக்கு கொடுத்தாய் நீ அளித்த பண்பு மற்றும் கல்வி போல!வரம் ஒன்று கேட்கிறேன் என் ஐய்யனிடம்
மறு ஜென்மம் ஒன்று இருந்தால் பிறக்க வேண்டும் இந்த வீட்டில் மகளாக
வீட்டைத் தாங்க வேண்டும் ஆலமரத்தின் விழுதாக !
.

No comments:
Post a Comment