15/08/1947,ஆம் ஆண்டு ஆழ்ந்த நித்திரையில் இருந்து
என் சுதந்திர நாட்டில் பிறந்த காந்தி(விநாயகம் ) நீ,
எதையும், தன் இளமையான சிரிப்பால் சகித்துக்கொள்ளும்
மோகன்தாஸ் காந்தி!! தவறு !!"காந்தி விநாயகம்" நீ,
என் வீட்டின் ஆலமரத்தையும் அதன்,வேரையும்
என்றும் கட்டி காக்கும் காவலன் நீ,
என் வீட்டு அன்னையை (கண்ணாத்தாள்) கரம் பிடித்த
அந்த சுந்தரேசன் நீ ,
என் அன்னையின் பிரிய அண்ணனும் நீ,
பொறுமையின் சிகரம் நீ,
உன் உழைப்பின் வேகத்தை உன் பாதங்களில் இருக்கும் உன் நாடி நரம்புகளை கேட்க வேண்டும்..
அது சொல்லும் நீ உனக்காக நடந்ததை விட
எங்களுக்காக நடந்தது தானே அதிகம்...
மற்றவர்கள் யாராவது உன்னை கோவித்துக்கொள்ளும் போது ,
அதை ஒரு அன்னை போல மெலிதாக சிரித்து,
ஒரு கைக்குழந்தை போல அவர்களை மறந்து விடுவாய் நீ ,
தன் கரம் பிடித்தவளின் சுமைகளைஅன்றும்,இன்றும்,என்றும்
தாங்கும் சுமைதாங்கி நீ ,
அந்த தர்மனுக்கு வருண பகவான் பிடித்த குடை போலவும்
உனக்கு முதுகெலும்பாகவும் இருப்போம் உன் இனி வரும் பயணத்தில்....

No comments:
Post a Comment