Thursday, January 31, 2019

என் சீமை .....




பெயரில் "நகரமும்"
முடிவில் "பட்டியையும்"
இனைத்த இரு நூறு குடும்பம் கொண்ட ...
ஏற்றமிகு ஊரே நகரம்பட்டி,
குட்டி கிராமம் தான்
ஆனால் புகழ் சொல்ல ஏராளம் ,.
தெரியாத சரித்திரமும் 
அரியாத சாதனையும் 
அறிந்தே அறியச்செய்யும்
ஆனந்த பூங்காதான் இந்த நகரம்பட்டி ...
என்ன இல்லை இவ்வூரில் .. ?
கோயில்உண்டு, குளம் உண்டு
ஆறும்உண்டு .. நல்ல பேறுமுண்டு
பேச நேரமுண்டு
பேசாத மௌனமுண்டு ..
நாட்டார் குடை உண்டு .,
நாட்டுக்கூட்ட பங்கும் உண்டு ,
தேரில் உரிமையுண்டு ..
போரில் பங்கும் உண்டு ,
குட்டி ஊராயினும் கூத்தாடும் குளங்கள் உண்டு ,
பனைமரம் அதிகமுண்டு ,
பட்டாபிஷேகமுண்டு ,
கூட்ட புளி உண்டு , கோட்டையில் கொடியுமுண்டு!
புரவி பொட்டலுண்டு,
பொங்கச்செய்யுண்டு ,
போர்க்கால வயலுமுண்டு ,
செட்டி ஆறுமுன்டு,
செவிட்டு மடையுமுண்டு
வண்ணாந்துறையும் உண்டு,
வருமானம் நிறைய உண்டு
வேங்கைப்புலி குளமுண்டு ,
வேடிக்கைமனிதருண்டு,
வேதங்கள் நிறைய உண்டு!
அனைக்கட்டும் ஒன்றுஉண்டு,
அருகிலே ஆறும் உண்டு
சவுக்கை இரண்டு உண்டு ,
சௌகரியம் நிறையு உண்டு ,
சரிநிகர் அம்மன்கள் சரித்திர கதையுமுண்டு ,
"கரியான் காளி"யுண்டு ,
"அழகியம்மன் "அருகில் உண்டு ,
ஐயனார் கோவிலுண்டு ..
அருகிலே ஆடும் உண்டு ..
சேங்காய் குளமுண்டு ,
சேகரங்கள் நிறைய உண்டு,
சிவனுக்கு கோவிலுண்டு 
சிவச்சொத்து நிறைய உண்டு ,
புதூரணி குளமும் உண்டு,
புள்ளையார் கோவிலுண்டு!
கட்டுப்பாடு அதிகம்உண்டு .,
தட்டுப்பாடு இருந்ததில்லை ..

பஞ்சாயத்து தலைமைஉண்டு ,
பஞ்சாயங்கள் குறைய உண்டு,
மீன்பிடிகுளங்கள் உண்டு ,
தேன் கூடு அதிகம் உண்டு ,
சின்ன ஊராயினும்
எண்ண முடியவில்லை ,
இடங்கள் தெரியவில்லை ,.
வண்ணவண்ணமாக
வாழ்வில் தோன்றுகின்ற
சிந்தனை சொல்லிடவே !!!
கவிகள் அதிகமுண்டு
காவியங்கள் படைத்ததுண்டு ..
தெரியுமா உங்களுக்கு ? ,.
இருநூறு குடும்பத்தில் ..
வாரிசுகள் பறந்து வாழும்..
பசுமை பூமியன்றோ?
எவ்வூரில் நாங்கள் இல்லை ,?
எதில் எங்கள் பெயர்கள் இல்லை ,?

எங்குமே வாழ்கிறோமே!!!
எக்கச்சக்க புன்னகையில்...
உள்ளூரில் இருந்தாலே..
ஒரு நொடி போதாது பெருமைஎன்று..
அயல் நாட்டில் அடிவைத்து
அதிகமாய் வாழுகிறோம் ..
உள்நாட்டில் . இருந்துவிட்டால் ..
உறவுகள் அறியும் ..
ஆனால் உலகம் அறிந்திடவே
கடல்தாண்டி வாழுகின்றோம் ..
என்றும் அன்புடன்

"நகரம்பட்டி"


Lyrics written by "Ramesh"

Saturday, July 11, 2015

யாசகம்!!

ஆந்த
 காலன் கூட,
யாசகம் கேப்பான்,
ஆந்த
ஈசனிடம்,
 தாயின் பிராசவ வலி காக!!

Tuesday, September 23, 2014

தனிமை......

ஒரு மனிதனின், 
தனிமை!
அவனை தாக்கும், 
புற்றுநோய் வீடா 
கொடுமையானது!!!

Saturday, May 31, 2014

என்கிறது !!

ஒற்றை குடையில்
உன்னை உரசி
நடக்கையில்
மழை நிற்க கூடாது
என்கிறது மனம்..

Wednesday, October 3, 2012

மகாலட்சுமி ..


என்ன சொல்வது இவளை பற்றி,
இவள் பேர்  சூட்டியது போல
 குணத்தாலும்,மனதாலும்
 மகாலட்சுமி நீ,
 நாதனின் ஆதிசக்தியும் நீ,
 பக்தியின் மார்கத்துக்கு ஒரு உதாரணம்  நீ,
இவள் படித்த பாடங்களை விட இவள் தானம் 
செய்த பட்டங்கள் தான்  அதிகம் ,


என் தாயின் பிரிய தோழி நீ,
இனி வரும் தலைமுறைக்கு பக்தியின் மார்க்கத்தை 
காட்ட நீ ஒரு
 உதாரணம் ,
நீ யாசிக்கும் சக்தியை போல உன் பெயரும்
 புகழும் பிரகாசிக்க வேண்டும்,

Monday, September 24, 2012

வைப்ரேஷன்...!!!

ஆடி மாசத்தில் என் வீட்டில் அடி வைத்து சுந்தரத்தின் ராஜ்யத்தை 
அடி மேல்  அடி ஆள பிறந்த மன்மத ராசா இவன் ,
நான் செல்லமா (vibration) வைப்ரேஷன்  என்று கூப்பிடும்
செல்ல தம்பி இவன் ,
நினைவுகள், ஒவ்வொன்றும்  என் கண் முன்னால்
இருக்கிறது என் தந்தை என் அம்மாவிடம் 
கண்ணாமூச்சி  விளையாடியது,
 நீ பிறந்த போது இருக்கும் ,
அன்று வந்த அந்த தந்தியில் இருந்த சுவாரசியம்
 இன்றும்தொடர்கிறது ,
மூல நட்சத்திரத்தில்  பிறந்து மூளையை மூலதனமாக்கி  அஸ்திவாரமாக  இருக்கும் ஆதிசேஷன் நீ ,
சேதுவின் கடலில் 7வது   முத்து  நீ ,
இவன்  நேசிக்கும், தளபதி  போன்று பேச்சுக்களில்
 துள்ளி விளையாடும் கில்லி ,
சிற்பி  கை பட்ட இடம் எல்லாம் எப்படி சிலை ஆகுமோ ,
அது, போல  இவன்  கை பட்ட  கணினி எல்லாம்  எந்திரன்  ஆகும் ,
பாசத்துக்குக்காகவே ஆகிய  நாத்திகவாதி இவன் ,
நீ, உருவாக்கும் ப்ரோக்ராமிங் போல உன் திறமைகள்
 வளர வேண்டும் ,..,
பின்பும்  
உன் (சக்தி ,ஜெஸ்ஸி ) இடம் சொல்லுவேன் இந்த கார்த்திக்கின் லீலைகளை தொடரட்டும்........

பொக்கிஷம் ...

என் சித்தி எனக்கு கொடுத்த அறிய பொக்கிஷம் நீ ,
என்  வீட்டு செல்ல  பிள்ளை  நீ ,
என் முகம் பால் வடியும் முகம் என்று வர்ணிக்கும் தம்பி நீ  ,
"புஜி"  என்று அழைக்கும் செல்ல பிள்ளை நீ ,
சக்தியின்   சாம்ராஜ்யத்தின்   தல  தளபதி  நீ ,
சேது வீட்டின் 6 ஆம் முத்து நீ ,
அந்த கண்ணன்  செய்வதை போல நீ  செய்திருக்கும் லீலைகளுக்கு ஒரு எல்லைகள் இல்லை ,
அவனைவிட மிகவும் பாக்யசாலி நீ,
அவனை கொஞ்ச  இரண்டு அன்னைகள் மட்டும் தான்,
ஆனால் உன்னை  தோளில் சுமக்க இங்கு நான்கு அன்னைகள் ,
7 மாதத்தில்   பிறந்து,
"பிரநீத்" என்று பேர் சூட்டி கொண்டு ,
7 லோகத்தை ஆளும் திறமை கொண்டவன் நீ ,
யாரும் எவரும் தொலை தூரத்தில் இருந்தாலும் தொடர்பு 
 கொள்ளும்   தொ(ல்)லைப் பேசி நீ ,
உன் தாய் நினைத்த கனவுகளை நீ, கட்டும் கட்டிடம் போல உயர  வேண்டும் ,
அந்த மழையில்  பிடித்த பாசம்(பாசி) கூட மறைந்து விடும் ஆனால்
நாங்கள் எல்லாரும்  உன்  மேல்  வைத்த   பாசம்  மட்டும் மாறாது 
அது போல் எங்கள் அனைவரின் நம்பிக்கையையும் நீ 
காப்பாற்றுவாய் என நம்புகிறேன்  என் அன்புத் தம்பி..........

அஜித்

எனக்கு நினைவு தெரிந்த நாள்  முதல் இவன்  கைவண்டியை பிடித்து நடந்ததை விட என்  தாய் (சித்தியின்)சேலையின்  முந்தானையை பிடித்து நடந்தது தானே  அதிகம்,
அஜித் என்ற பேருக்கு" மாயம்" அல்லது,"அடிகற்பு" என்று அர்த்தம்,
அதே போல இவன் அனைவரின் மனதை  மாயமாய் கவர்ந்து அவர்கள் மனதில் நீண்ட இடம் பிடிப்பவன் இவன் ,
பாரதி ராஜியத்தை  தாள தாங்கும் தளபதி இவன் ,
சேதுவின் கடலில்  5 ஆம் முத்து இவன் ,
இவன் அவனுக்கு பேரை சூட்டியதை போல மயக்கம் ஆகும்
கண்ணன் இவன் ,
என்னுடன் வெண்மேகத்தில் ஆட ஸ்ருதியோடு லயம் சேர்த்த
 தம்பி  இவன் ,
எவராலும் இவனை போல பாடும் பாட்டில் வரிகளை சொல்ல முடியாது ,
அந்த கவிஞர் கூட மறந்து போவான்  அந்த வரிகளை இவன் அல்ல,
இவனின் கையெழுத்து போல இவனின் பேச்சும் யாரையும் காயப்படுத்தி விடாது,
நாம் இருவரும் சேர்ந்த சந்தோஷங்களுடன் சங்கடங்களையும் சரிசமமாக பகிர்ந்து கொண்டோம்,
இவன்   சிறிய வயதிலேயே வாழ்கையை  நோக்கி செல்லும்  ஒரு யதார்த்தவாதி நீ ,
நீ கட்டும் அணைகள் போல உன் வாழ்க்கை சந்தோசமாக இருக்க வேண்டும்,
அன்று  நான் தோள் மீது சுமந்த தம்பி,இன்று  என் தோளுக்கு மேல் வளர்ந்த தோழன் நீ  . 

Friday, September 7, 2012

ஜான்சி ராணி

என்ன சொல்வது  இவளை பற்றி ,
இவள் கையை  சூப்பும்  நாள் முதல் இவள் தன் மன்னவனை கை கோர்க்கும்   நாள்  வரை அறியும்  தோழி நான் ,
  அந்த பாரதி கண்ட புதுமை பெண் (ஜான்சி ராணி )நீ,
சூட்டிய  பேரை போல இவள் தைரியத்திற்கு,ஒரு
எல்லையே  இல்லை ,
அந்த  ஜான்சி  ராஜ்யத்தை,அந்த ஆண்டதை போல!!!தவறு என்  வீட்டை  என்றும் ஆளும்"
(ஜான்சி ராணி " நீ,
சேதுவின் கடலில் 4  வது முத்து நீ ,
அந்த  நக்கீரன் கூட தோற்று போவான்,
 இவளிடம்  
விவாதம் செய்து  கொண்டு ,
நாம் ,இருவரும் சேர்ந்து  பகிர்ந்த சங்கடங்களை விட,  நகைச்சுவைகள் தானே அதிகம் என் கண்மணியே ..
கோரிக்கை ஒன்று வைக்கிறேன் கேளடி என் கண்ணே ,
கோபம் இருக்கும் இடத்தில தானே குணம்,இருக்கும் எனபார்கள் ,
அது தானோ என்னவோ நான் உன்னிடம் குணத்தை விட்டு கோபம் தன் காட்டி இருக்கிறேன் ...
கடலில்  சங்கமித்த நதி போல,நீயும் உன் மணவாளனும் சங்கமம் ஆக வேணும்,அதில் வீசும் அலைகள் போல 
 
உன் வாழ்வு  உயரவேண்டும் .




Tuesday, September 4, 2012

வாழ்கை!!

வாழ்கை
காவியதிர்ககாவோ கல்லறைககாவோ இல்லை
இரு மனம் சேரும் காதலுக்கா தான் 
வாழ்கை!! 

Tuesday, August 28, 2012

டீமார்ட் -ராணி!!



மழை காலத்தில் சுந்தரம் என்ற தோட்டத்தில் பூத்த மலர் நீ,
நான் ராணி !!தவறு  டீமார்ட் -ராணி   என்று  பேர்  சொலி  அழைக்கும்  செல்ல " டீமார்ட் -ராணி"  நீ ,
சேதுவின் கடலின்  மூன்றாவதாக பிறந்த முத்து நீ,
சுந்தரின்  ராஜ்யத்தை  ஆள   பிறந்த  ராணி  பில்லை!!சேதுராணி நீ,
அந்த மேட்டிஒலி சலங்கையில் கேட்கும்" லீலா" என்ற ஓசை நீ ,
நாம் இருவரும் பழகிய நாட்களை விட நாம் இருவரும் பகிர்ந்துகொண்ட,காட்சிகள்  தானே அதிகம் ,
மறக்க முடியாது நம் இருவரும் (ஸ்கூட்டியில் )பயணம்   சென்றதில் அனுபவம் ,
அந்த  சந்திரமுகி  அறையில் நாம் எல்லாரும் சேர்ந்து பேசுனதில் விஷயங்களை விட,நாம்  பகிர்ந்து கொண்ட சிறு சிறு நகைச்சுவைகள் மற்றும் குறும்புகள் தானே அதிகம் ,
நீ  கட்டும் கட்டிடம் போல உயர்த்தும்,
உன் வாழ்வு  ,
காத்திருக்கிறேன் அந்த தினத்துக்காக இந்த ராணியின் ராஜாவை பார்க்க அன்று வரும் கண்ணீர் கூட  தித்திக்கும் என்  தோழிக்காக

ப்ரியம் ..


ப்ரியம்  என்று பெயர் வைத்துள்ள என் வீட்டின் பிரியா சித்தி நீ ,
சேது வீட்டின் நாலாம்  குலவிளக்கு  நீ ,
அந்த நவசக்தியின் ஆதிசக்தி நீ ,
பழகிய சிறிது நேரத்தில் என்னுடைய ப்ரிய தோழி  நீ,
எங்கள் அனைவருக்கும் நீ  கொடுத்த அறிய பொக்கிஷம்
என் சித்தியை  என்  தங்கையாக கொடுத்தது  
என்  (லதாசித்தியின்   ) நிழல் நீ ,
நன்றி சொல்கிறேன் உனக்கு ,
அவள் பொறுப்பை தன்  பொறுப்பாக,ஏற்று என்றும்  என்  தந்தையின்  தூணாக  நின்று  துணையாக  இருக்க வேண்டுகிறேன்.... 

Friday, August 10, 2012

சுமைதாங்கி...



15/08/1947,ஆம் ஆண்டு ஆழ்ந்த நித்திரையில் இருந்து 
என் சுதந்திர நாட்டில் பிறந்த காந்தி(விநாயகம் ) நீ,
எதையும், தன் இளமையான சிரிப்பால் சகித்துக்கொள்ளும் 
மோகன்தாஸ் காந்தி!! தவறு !!"காந்தி விநாயகம்" நீ,
என் வீட்டின் ஆலமரத்தையும் அதன்,வேரையும்
 என்றும் கட்டி காக்கும் காவலன் நீ,
என்  வீட்டு அன்னையை (கண்ணாத்தாள்) கரம் பிடித்த
 அந்த சுந்தரேசன் நீ ,
என் அன்னையின் பிரிய அண்ணனும் நீ,
பொறுமையின் சிகரம் நீ,
உன் உழைப்பின் வேகத்தை உன் பாதங்களில் இருக்கும் உன் நாடி நரம்புகளை கேட்க வேண்டும்..
அது சொல்லும் நீ உனக்காக நடந்ததை விட
 எங்களுக்காக நடந்தது  தானே அதிகம்...
 மற்றவர்கள் யாராவது உன்னை கோவித்துக்கொள்ளும்  போது  ,
அதை ஒரு அன்னை போல மெலிதாக சிரித்து,
ஒரு கைக்குழந்தை போல  அவர்களை மறந்து விடுவாய்  நீ ,
தன் கரம்  பிடித்தவளின் சுமைகளைஅன்றும்,இன்றும்,என்றும் 
தாங்கும்  சுமைதாங்கி நீ ,
அந்த தர்மனுக்கு வருண பகவான் பிடித்த குடை போலவும்  
உனக்கு முதுகெலும்பாகவும் இருப்போம் உன் இனி வரும் பயணத்தில்....



Thursday, August 9, 2012

கண்ணன்!!

தன்  அரிய மௌனத்தால் அனைவரையும் 
தன் பக்கம் இழுக்கும்,
ஒரு காந்த சக்தி படைத்தவன் நீ,

ராதையின் (ராதிகாவின்)கண்ணன் நீ, 
அந்த வைதேகிக்காக காத்திருந்தது 
விஜயகாந்த்  மட்டும் அல்ல நீயும் தான்,
காதலுக்கு  மரியாதையை கொடுத்த

அந்த "விஜய்யின்" ரசிகன் நீ ,
நித்திரையில் அந்த ரங்கனை (தவறு),
அந்த கும்பகர்ணனையும்
 மிஞ்சும் என் அண்ணன் ,
தெரிந்து தெரியாத என் தவறுகளை தெரிந்து 
இருக்கும் என்  தோழன்   நீ ,
உன்னிடம் பழகியது குறுகிய காலமாய் இருந்தாலும்,
நம்மை ஒரு நூலில் கட்டிய ,
இந்த பந்தத்தை கொடுத்த என்,

அய்யன்னுக்கு என் இனிய நன்றிகள் ,
அந்த கணினி போல் உயர வேண்டும்,
உன் வாழ்வும் பிரகாசிக்கட்டும் 

உன் பேரும்!!

புதிர்...

தன்  குறும்புகளால்,இளமையான சிரிப்பால்,
அனைவரையும் கவர்ந்து இழுக்கும்  மாய கண்ணன் நீ,
என் வீட்டில் நான் தினமும் படிக்கும் தினசரி நாளிதழ் நீ,
என்னை ஒவ்வொரு கட்டத்திலும் 
விமர்சனம் செய்யும் விமர்சகன் நீ ,
நீ விமர்சனம் செய்ததை விட உன்னில்,இருந்த விஷயங்கள்  தானே அதிகம்,
கள்ளி  கூட ஆசைப்படும் நீ இருக்கும் தோட்டத்தில் வளர  ,
மணம் வீசும் சந்தனம் போல நீ,
உன் புதிரான பெயருக்கு விடை நீ,
உன் துன்பத்தை கூட மறைத்து,
மற்றவர்களுக்கு இன்பம் அளிப்பவன் நீ.
இதே போல் என்றும் எங்களுக்கு இன்பத்தை மட்டும் தா..... 

Wednesday, August 1, 2012

ராதே!!


ராதே!!என்று பெயர் வைத்து உன்  குரலால் ஸ்வரங்களையே ஆட்டிப்  படைப்பவள்  நீ, 
 


என்  அண்ணனை(பாலாஜி) தன்,
குறும்புகளால் கவர்ந்தவள் (அம்மு ) நீ ,
அந்த காளிதாசன் வர்ணித்த  சகுந்தலை  நீ,
ஜூலை 8 ஆம் நாள் பிறந்த அந்த நந்தகோபலனின் 8 ஆம்  குமரனை யாசிக்கும்" மீரா" நீ ,
குழந்தை மணம் படைத்தவள்  நீ ,
என் செம்மொழி(தமிழ்மொழி ) பேசுமொரு ஓமணப்பெண்  நீ ,
நீ படித்த பாடங்களை விட நீ,அந்த," ஸ்ரீஹரி" பாடல்களில் தியானம் செய்தது தான் அதிகம் ,               
அது,தானோ என்னவோ  உனக்கு அவன் கொடுத்த  அரியப்  பொக்கிஷம்,  
என் அண்ணன் உன் மன்னன்,
வேண்டுகிறேன் அந்த அய்யனிடம் நீ ,பாடும் ஸ்வரங்களைப் போல் சுகங்கள் ,
மலர வேண்டும் உன் வாழ்வில்....

Tuesday, July 17, 2012

புதுமைப் பெண்!!

மங்களத்தில் பிறந்து  நகரத்தில் (நகரம்பட்டியில்) மாங்கல்யம் 
பெற்ற மங்கை நீ ,
அந்த பாரதி, கண்ட புதுமைப் பெண் நீ,
அதனாலோ ,என்னவோ பாரதி பிறந்த அன்று ஜனனம் ஆனாய் !
சேதுவில் மூன்றாம் குலவிளக்கு நீ ,
அந்த தட்சிணாமூர்த்தி..தவறு!!...சுந்தரமூர்த்தியின் விஜயகவுரி (விஜயா) நீ,
நீ, பேசும்  தமிழை விட உன் ஆங்கிலமே இனிமையிலும் இனிமை !!
முயற்சியின் முக்கியத்தை உன் பிள்ளைகட்கு போதிக்கும் புத்தர் நீ !
அந்த (ஜெனரல்) டயர் கூட மறந்திருப்பான் அவன் அரங்கேற்றிய அந்த நாளை, ஆனால்  மறக்கவில்லை நீ !

சுகம்!!


சித்திரை மாதம்  நித்திரை கழித்து, 
 வைகாசி மாதம்
 என் ,
கூட என் வீட்டுக்கு வந்த செல்ல சித்தி நீ !
சித்தி அல்ல ! தவறு!!.என் தோழி நீ !
"பொறுத்தார் பூமி ,ஆள்வார் "என்ற சொல்லுக்கு மறு உதாரணம் நீ, 
நாம் இருவரும் பகிர்ந்து கொண்ட சங்கடங்களை  விட, 
சிறு,சிறு நகைச்சுவைகள் தானே அதிகம் !!
அந்த பாரதிக்கு கிடைத்த சுமதி..தவறு.."சுகம் "நீ 
சேது வீட்டின்  இரண்டாம் குலவிளக்கு நீ ,
இந்த பாகனேரி, மண்ணில் பிறந்தததாலோ  என்னவோ, 
உன் பொறுமைக்கு சில நேரத்தில் எல்லையே  இல்லை...
கேள்வி, ஒன்று கேட்கிறேன் பதில் சொல் தோழியே?
நதிகள், உருவாகும் இடம் வேறு,வேறு இடங்கள் என்றாலும் அது சங்கமிக்கும் இடம் கடல் தானே !
ஆனால், நாம் இருவரும் ஒன்றாக ஒரே நாளில் வந்தாலும் இருது   வரை என்னை ஏன் உன் கடலில் சேர்க்கவில்லை(சேது வீடில்)??

சுவடுகள் !!

என் வீட்டு ஐ.நா சபை நீ 
அந்த காந்தியின் (மாமாவின்) கஸ்தூரிபாய் நீ,
என் வீட்டு கண்களை தன் கண்களுக்கு மேலாக
 காப்பாற்றும் "கண்ணாத்தாள்" நீ !
என்வீட்டு ஆலமரத்தை தன் பாசக் கரங்களால் 
  கட்டித் தாங்கும் வேர் நீ ,
என் வீட்டு சுமையை தன் தோள் மீது
 சந்தோசமாக தாங்கிக்கொள்ளும்
 சுமை தாங்கி நீ ,
என் தந்தைகளுக்கு,
 தன் ,
அன்னை உணவிட்ட நாட்களை விட 
உன் கரங்களால் நீ உணவிட்ட நாட்களே அதிகம் !!
அது தானோ என்னவோ,
 நீ கொடுக்கும் 
ஒரு பிடி சோறு கூட அந்த,
 அமிர்தத்தை விட அருமை !
அவர்கள் சங்கடங்கள் என்று 
வந்த போது
 உன் புன்னகையால் தீர்த்துக் கொடுத்தாய் !
கோரிக்கை ஒன்று ,
வைக்கிறேன் கேள் என் அன்னையே 
குறை தீர்க்க, குரல் கொடுக்க யாரும் இல்லை என்றாலும், கூடவே நிற்போம் உன் முதுகெலும்பாக !
சுமந்தவள் கொடுத்த சுமையை கூட ,
 சுகங்களாக சுமந்த உன்னைப் பற்றி சொல்ல ,
 சுவடுகள்  கூட பத்தாது - இந்த 
கவிதை வார்த்தைகளும் கொள்ளாது !

Thursday, July 12, 2012

நிலவு பயணம்!!

உன்னை சுற்றியே 

நிலவு பயணம் வேறு திசையில் இல்லை 

என் காதலும் அப்படிதான் 

உன்னை சுற்றியே

தீராத நிலவின் தேடல் போல்

ஆக்கிவிடாதே என் காதலை

ரசிக்க